பூர்ணிமாவை பார்த்து கதறி அழுத தாயார்! சொந்தங்களை பார்க்க பிக்பாஸ் கொடுக்கும் பிரீஸ் டாஸ்க்
பிக்பாஸ் கொடுத்த பிரிஷ் டாஸ்க்கில் முக்கிய போட்டியாளர்களின் பெற்றார்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
பிக்பாஸ் 7
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 75 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
மற்ற சீசன்கள் போல் அல்லாமல் இந்த சீசனில் நாட்கள் மளமளவென 75 நாட்களை கடந்து விட்டது. ஆனாலும் போட்டியாளர்கள் தங்களிடம் உள்ள வன்மத்தை வைத்து நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அத்துடன் அடிக்கடி போட்டியாளர்கள் ஏதாவது சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார்கள். இதனால் சமூக வலைத்தளங்களில் பிக்பாஸ் ட்ரோல் அதிகமாகி வருகின்றது.
பிரதீப் ஆண்டனி நிகழ்ச்சியை விட்டு சென்ற பிறகு இந்நிகழ்ச்சியை ரசிகர்கள் பார்க்கமாட்டார்கள் என்று தான் பேசப்பட்டது. ஆனால் அதன் பிறகும் ரசிகர்கள் இந்த சீசனை ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.
பிரிஷ் டாஸ்க்
இந்த நிலையில் இந்த வாரத்திற்கான முதல் டாஸ்க்காக பிரிஷ் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
போட்டியாளர்களை “பிரிஷ்” என கூறியதும் பூர்ணிமாவின் அம்மா தான் முதல் ஆளாக உள் வருகிறார். மகளை பார்த்தவுடன் கட்டியணைத்து கதறியழுகிறார்.
பின்னர் விக்ரம், அர்ச்சனா ஆகியோரின் பெற்றார்கள் உள் வந்தார்கள். அப்பாவின் கண்டிப்பால் பல இன்னல்களுக்கு முகங் கொடுத்த அர்ச்சனா அப்பாவை பார்த்த பின்னர் ஓடி வந்து கட்டியணைத்து கொள்கிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அத்துடன் பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் போது பெற்றார்களுக்கு பல கண்டிஷன் போடப்பட்டிருக்கும் இதனை எப்படி கையாள்கிறார்கள் என்பதனை பொருத்திருந்து பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |