சண்டை போடுவதற்காக அன்பு காட்டாமல் தவிக்கும் விஷ்ணு.. வாய் விட்டு சிரித்த கமல் - நடந்தது என்ன?
“ சண்டை போடுவதற்காக அன்பை வெளிக்காட்டாமல் இருக்கிறேன்..” என பிக்பாஸ் விஷ்ணு கூறியுள்ளார்.
பிக்பாஸ்
நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ்,யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ், இந்த சீசனில் வீட்டிற்குள்ளே பல மாற்றங்களை செய்துள்ளது.
இதனை தொடர்ந்து இந்த வாரத்தில் அனன்யா மற்றும் கூல் சுரேஷ் ஆகிய இருவர் வெளியேற்றபட்டுள்ளனர்.
கூல் சுரேஷ், அதிக மன உளைச்சல் காரணமாக பிக்பாஸ் வீட்டிலிருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்தார். இதனை காரணமாக வைத்து தான் இன்றைய தினம் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.
வன்மத்தை கக்கும் ரவீனா
இதனை தொடர்ந்து இன்றைய தினம் வழமைக்கு மாறாக கமல் போட்டியாளர்களை விலாசி வருகிறார்கள்.
அந்த வகையில் இன்றைய தினம் “ பிக்பாஸ் போட்டியாளர்கள் தன்னை பற்றி என்ன நினைக்கிறார்கள்? என கேட்டுள்ளார்.
அதற்கு விஷ்ணு “அன்புவானவர் நான், ஆனால் அதனை காட்டினால் அவர்களிடம் என்னால் சண்டை போட முடியாது என கூறியுள்ளார். பின்னர் விசித்திரா, “ எதையும் தாங்கிக் கொள்வேன்..” என கூறுகிறார்.
இதற்கு மாயா நக்கலாக சிரிக்க அடுத்து ரவீனாவிடம் டாஸ்க் சென்றுள்ளது. என்னிடம் நிறைய வன்மம் இருக்கின்றது என ரவீனா கூற கமல், “ அப்போ வாழ்வதற்கு வன்மம் அவசியமா?” என நகைக்கிறார்.
அத்துடன் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ நிறைவடைந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |