எல்லை மீறும் வாக்குவாதம்.. வார்த்தைகளால் சக போட்டியாளர்களை கொள்ளும் பிரதீப்- நடந்தது என்ன?
பிரதீப் - நிக்ஷன் இருவருக்கும் தொடர்ந்து சண்டைகள் வெடித்து கொண்டிருக்கின்றது.
பிக்பாஸ் 7
நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனன்யா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். இதனை தொடர்ந்து அதிகமான மன அழுத்தம் காரணமாக பவா செல்லத்துரையும் வெளியேறியுள்ளார்.
தற்போது பிக்பாஸ் வீட்டில் 16 போட்டியாளர்கள் இருந்து வருகிறார்கள்.
மனமுடைந்த நிக்ஷன்
அந்த வகையில், பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் பிரதீப் தொடர்ந்து நிக்ஷனிடம் வாக்குவாதம் செய்து வருகின்றார்.
நிக்ஷனை பார்த்து, “ உன்ன ஆர்ட்டிஸ்-ன்னு சொல்லவே அசிங்மாக இருக்கு...” என அவரின் தொழிலை அசிங்கமாக பேசியுள்ளார்.
இந்த வாரம் நாமினேஷனில் இருக்கும் பிரதீப் இப்படி அவதூறாக நடந்து கொள்வது அவரின் வாக்குகளில் அதிகப்படியான தாக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்றைய தினம் வெளியான இரண்டாவது ப்ரோமோவில் நிக்ஷன் மனமுடைந்தப்படி நிற்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |