கமல் அதிரடி... 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 24 மணிநேரமும் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 9-ஆம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 தொடங்கவிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது.
அதில் வழக்கமாக இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் மட்டும் இரவு 1 மணி நேரம் ஒளிப்பரப்பாகும்.
ஆனால் இந்த முறை டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் இந்த நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்ப உள்ளனர். இதனால் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் அனைத்தையும் ஒன்றுவிடாமல் பார்த்துவிட முடியும்.
இந்த இனிப்பான செய்தியை கமல் அறிவித்துள்ளார்.
இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.