பிக்பாஸ் கிராண்ட் ஃபினாலே... வெற்றிபெற்ற அந்த ஒரு போட்டியாளர் இவரா? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்;
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது, இறுதிக்கட்டத்தை நோக்கி சென்றுள்ளது. மேலும், பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங் சற்று முன் நிறைவடைந்துள்ளதாம்.
இதனிடையில், கடைசி நேரத்தில் பிக் பாஸ் டீம் ஏதோ கோல்மால் பண்ணி வருவதாக கணிப்புகள் எழுந்த நிலையில், தற்போது மக்களின் தீர்ப்பே இறுதியாகி உள்ளதாம்.
அதன்படி, நிரூப் நந்தகுமார் 5வது இடத்தில் வெளியேறி உள்ள நிலையில், நடன இயக்குநரான அமீர் 4-வது இடத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் என தகவல்கள் கசிந்துள்ளன.
மேலும், டிக்கெட் டு ஃபினாலே வெற்றிப் பெற்ற அமீர் 4-வது இடத்தில் வெளியேறி இருப்பதே சிறப்பான விஷயம் தான் என அமீர் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதனையடுத்து, இளைஞர்களின் ஃபேவரைட்டான போட்டியாளராக இருந்த பாவனி இந்த சீசனின் செகண்ட் ரன்னர் ஆப் ஆக மாறி உள்ளார். பாவனி டைட்டிலை வின் பண்ண வேண்டும் என தொடர்ந்து சப்போர்ட் பண்ணி வந்த பாவனி ஆர்மியினருக்கு இது சற்றே மன வருத்தத்தை தரத்தான் செய்யும்.
இந்நிலையில், நாமினேட் ஆன போது எல்லாம் மக்கள் ஓட்டுக்களால் தொடர்ந்து முதலிடத்தில் சேவ் ஆன ராஜு ஜெயமோகன் தான் இந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 5ன் டைட்டில் வின்னராக ஆகி உள்ளார் என்கிற அட்டகாசமான தகவலும் தற்போது கசிந்துள்ளது.
இதனால், ராஜுவுக்காக தொடர்ந்து ஓட்டுக்களை போட்டு வந்த ராஜு ஆர்மியினர் பயங்கர உற்சாகத்தில் உள்ளனர்.