ஆக்ரோஷமாக கத்தும் தாமரை... அர்ச்சனாவையே தூக்கி சாப்புட்ட பிரியங்கா
பிக் பாஸ் வீட்டில் அன்பாக பழகி வந்த தாமரை, பிரியங்கா இருவரும் தற்போது எலியும் பூனையுமாக மாறி உள்ளனர்.
தாமரையை சீண்டி வம்பு இழுப்பதையே முதல் வேலையாக செய்து வருகிறார் பிரியங்கா.
ஒரு கட்டத்தில் தாமரை கத்தியை எடுத்து குத்திட்டு அதுவும் டாஸ்க் என சொல்லுவியா...என் மனசை பாதிக்கும்னு தெரிஞ்சிதான் நீ பேசுற என்று ஆக்ரோஷமாக கத்துகிறார்.
இன்றைய நிகழ்ச்சியை பார்த்த பார்வையாளர்கள் பிரியங்காவை விளாசி வருகின்றனர். பிரியங்கா கேரக்டர் எப்படினா, ஒன்னு அவங்க கூடவே ட்ராவெல் பண்ணனும் இல்லை அவங்களுக்கு அடிமையா இருக்கனும்.
யாராவது எதிர்த்து பேசினாலோ டாமினேட் பண்னாங்கனாலே அதை அவரால் ஏத்துக்க முடியாது என்று பலரும் பல விதமான கருத்துக்களை கூறி வருகின்றனர்.
பிரியங்காவின் அடாவடி பேச்சை பார்த்து கடுப்பான ஒரு நெட்டிசன்கள் நம்மளும் இந்த பிரியங்காவை அர்ச்சனா மாதிரி அன்பு பாயாசம்னு நினைச்சோம். ஆனா இவ அவங்களையே தூக்கி சாப்புட்ருவா.
வீட்டில் இருக்க ஒரே தமிழ் பெண் தாமரைதான். அவங்களை சூடேத்தி கிட்டே இருந்தால் போதும்னு ஸ்கேச் போட்டு தாமரையை சீண்டிகிட்டே இருப்பதாக கூறி வருகின்றார்கள்.
சண்டையை போட்டு விட்டு இன்றைய நிகழ்ச்சியில் ஏன் தாமரையை கூப்பிட்டு மறுபடி பேசனும் என்று கேள்வி கணைகளை தொடுத்து வருகின்றனர்.