ஷாக்கில் ரசிகர்கள்…. எலிமினேஷன் லீக் ஆகிடுச்சு.. பிக் பாஸ் வீட்டை விட்டு அதிரடியாக வெளியேறியது இவரா?
பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் இருந்து இந்த வாரம் யார் வெளியேறினார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
சனிக்கிழமை நிகழ்ச்சி ஆரம்பித்தவுடனேயே இன்றைக்கு யாரையெல்லாம் கமல் சேவ் பண்ணப் போகிறார் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் பார்த்து கொண்டிருந்தனர்.
தொழில்நுட்ப வசதியால் எலிமினேஷன் குறித்த தகவல் கசிந்து வண்ணமே உள்ளது.
ரசிகர்கள் பலரும் முதல் வாரத்தில் இருந்தே எதிர்பார்த்து காத்திருந்த சின்ன பொண்ணு தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறி உள்ளார் என கூறப்படுகிறது.
ஞாயிற்றுக் கிழமை எபிசோடுக்கான ஷூட்டிங் சற்று முன் நிறைவடைந்த நிலையில், இந்த தகவல் கசிந்துள்ளது.
அனைவருக்கும் இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டில் அம்மாவாகவே சின்ன பொண்ணு கடைசி வரைக்கும் இருந்து விட்டு யாரிடமும் எந்தவொரு பிரச்சனையும் பண்ணாமல் விளையாடி சென்றுள்ளார்.