விஜய் சேதுபதியை விமர்சித்த விஜே பார்வதி - வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரி
பிக்பாஸ் தமிழ் 9 இல் இருந்து பார்வதி மற்றும் கமருதீன் என இருவரும் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டனர்.
பிக்பாஸ்
கடந்த வாரம் பாரு, கம்மு ரெட் கார்ட் கொடுத்து விஜய் சேதுபதி மூலம் வெளியில் அனுப்பப்பட்டனர்.
இவர்கள் இருவரும் பிக் பாஸ் 9 வீட்டில் கடைசி வரை இருப்பார்கள் என்று நம்பப்பட்ட நிலையில் வி.ஜே. பார்வதி சாண்ட்ரா விஷயத்தில் நடந்து கொண்டதை கண்டித்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒரே நேரத்தில் இரண்டு ரெட் கார்டுகளை காண்பித்து பார்வதி மற்றும் கம்ருதீன் மற்றும் பார்வதியை வெளியேற்றியது அனைத்து மொழி பிக் பாஸ் பார்வையாளர்களையும் கவர்ந்துவிட்டது.

இந்நிலையில், பார்வதி தற்போது சமூக வலைதளங்களில் அந்த நிகழ்ச்சியையும் அதன் தொகுப்பாளரையும் கடுமையாக விமர்சித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தத் தொலைக்காட்சியை எச்ச டிவி எனச் பார்வதி சாடியுள்ளார். மேலும், தன்னைப் பின்தொடர்பவர் ஒருவர், "பிக் பாஸ் 9-ன் உண்மையான டைட்டில் வின்னர் நீங்கள் தான்" என்று பதிவிட்டதை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து இருந்தார்.
பார்வதி பதிவு
"ஜோக்கர்கள் இப்போது மனிதர்களாகி விட்டார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார். "Show runner is shame" என்று பதிவிட்டு, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதியையும் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
இந்த பதிவுகள் வைரலான நிலையில், பார்வதி மீது அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகச் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |