பிக்பாஸ் அல்டிமேட்டிலிருந்து வெளியேறிய சுரேஷ்: தனது தலைவர் பதவியை யாருக்கு கொடுத்தார் தெரியுமா?
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து முதல் நபராக சுரேஷ் தாத்தா வெளியேறிய நிலையில், அவரது தலைவர் பதவியை மற்றொரு போட்டியாளருக்கு மாற்றி கொடுத்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில், இதில் கலந்து கொண்ட சில போட்டியாளர்கள் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகி வரும் நிலையில், முதல் வாரத்திலேயே நாமினேஷனில், வனிதா, ஜூலி, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிநய், சுருதி, சினேகன், அனிதா, நிரூப் ஆகிய எட்டு பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் இன்று சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேறிய நிலையில், கடந்த வாரம் கேப்டன் டாஸ்கில் சுரேஷ் வெற்றி பெற்றிருந்தார். இந்நிலையில் தன்னுடைய தலைவர் பதவியினை சுரேஷ் யாருக்கு கொடுத்து சென்றுள்ளார் என்பது வெளியாகியுள்ளது.
சுரேஷ் தன்னுடைய கேப்டன் பதவியை சினேகனுக்கு கொடுத்துவிட்டு சென்றுள்ள நிலையில், சினேகன் இந்த வரும் வாரத்திற்கான தலைவர் என்பதால், அடுத்தவாரம் எவிஷ்னில் வரமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.