Bigg Boss: முத்து செய்த ஒற்றைத் தவறு... அனைத்து போட்டியையும் நிறுத்தி அதிர்ச்சி கொடுத்த பிக்பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் முத்து செய்த தவறால் பிக் பாஸ் ஒட்டுமொத்த டாஸ்க்கையும் அதிரடியாக ரத்து செய்துள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் செல்கின்றது.
இந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் தலைவராக விஷால் இருந்து வருகின்றார். குறித்த நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் 5 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், கடும் மோதல் நிலவி வருகின்றது.
இந்த வாரம் கொடுக்கப்பட்ட டாஸ்கிலும் பல மோதல்கள் ஏற்பட்டு, போட்டியாளர் மருத்துவமனை வரை சென்று வரவும் செய்துள்ளனர்.
இந்நிலையில், கேப்டன்ஸி மற்றும் நாமினேஷன் ஃப்ரீ பாஸ் டாஸ்க்கை பிக் பாஸ் ரத்து செய்துள்ளார். காரணம் யாருக்கும் யார் விட்டுக் கொடுக்கக்கூடாது என்று பிக் பாஸ் கூறியும், முத்து அதனைக் கேட்காமல் விட்டுக் கொடுத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |