கடவுள் கருப்பா இருக்க கூடாதா? பிக்பாஸ் சுருதியின் வைரலாகும் போட்டோஷூட்! குவியும் வாழ்த்துக்கள்
ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது அக்டோபர் 3ம் தேதி வெளியானது. இந்நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். அதில் ஒருவரான மாடல் அழகி சுருதி அறிமுகமானார்.
கருப்பாக இருப்பதால் இவரை புறக்கணிப்பதும், கிண்டல் செய்வதாலும், அதை எதிர்த்தே மாடலிங் துறையில் கலக்கி வருவதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், டார்க் தீம் போட்டோகிராஃபி போட்டோஷூட்கள் நடத்தப்பட்டது போது போட்டோஷூட்டில் தான் லட்சுமி தேவியாக பிக் பாஸ் சுருதி போஸ் கொடுத்திருந்தார்.
அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. கடவுள் எல்லாம் கலர்ஃபுல்லாத்தான் இருக்கணும் என்கிற மனநிலையை மாற்ற வேண்டும் என்கிற முனைப்போது எடுக்கப்பட்ட டார்க் காட் தீமில் நடத்தப்பட்ட கேலண்டர் போட்டோஷூட்டில் கருப்பு லட்சுமியாக அத்தனை அம்சங்களுடனும் போஸ் கொடுத்துள்ள சுருதியை பார்த்து ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
மேலும், அந்த புகைப்படத்தை தற்போது இணையத்தில் பலரும் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.
