Bigg Boss: சௌந்தர்யாவின் முதுகில் குத்திய ஜாக்குலின்... நட்பு என்ன ஆனது?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சௌந்தர்யா மற்றும் ராணவ் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதுடன், ஜாக்குலினையும் நம்பவில்லை என்று சௌந்தர்யா கூறியுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமாகியுள்ளது. விஜய் சேதுபதி நடத்தும் இந்நிகழ்ச்சியில் தற்போது வரை பரபரப்பிற்கு பஞ்சம் வராமல் இருக்கின்றது.
கடந்த வாரத்தில் சுஜா வருணியின் கணவர் சிவகுமார் வெளியேறியுள்ளார். இந்நிலையில் இன்று புதிய டாஸ்க் ஒன்றினை பிக் பாஸ் கொடுத்துள்ளார்.
கடந்த நாட்களில் நடைபெற்ற சாத்தான் மற்றும் ஏஞ்சல் டாஸ்க் அனைவரின் கோபத்தை வெளிக் கொண்டு வந்தது.
இந்த டாஸ்கில் சௌந்தர்யா மற்றும் ஜாக்குலின் இருவரும் நல்ல தோழிகளாக இருந்து வந்தனர். ஆனால் தற்போது சௌந்தர்யா கூறுகையில், ஜாக்குலின் தனக்கு தோழி தான்.... ஆனால் விளையாட்டில் கிடையாது என்று கூறியுள்ளார்.
மேலும் ராணவ் மற்றும் சௌந்தர்யா இடையேயும் அதிக மோதல் ஏற்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |