Bigg Boss: தர்ஷிகாவிற்கு தண்டனை கொடுங்க... கோஷம் போட்ட போட்டியாளர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷிகாவிற்கு தண்டனை கொடுக்க வேண்டும் என சில போட்டியாளர்கள் கூறியுள்ளனர்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமாகியுள்ளது. விஜய் சேதுபதி நடத்தும் இந்நிகழ்ச்சியில் தற்போது வரை பரபரப்பிற்கு பஞ்சம் வராமல் இருக்கின்றது.
கடந்த வாரத்தில் சுஜா வருணியின் கணவர் சிவகுமார் வெளியேறியுள்ளார். இந்நிலையில் இன்று புதிய டாஸ்க் ஒன்றினை பிக் பாஸ் கொடுத்துள்ளார்.
கடந்த நாட்களில் நடைபெற்ற சாத்தான் மற்றும் ஏஞ்சல் டாஸ்க் அனைவரின் கோபத்தை வெளிக் கொண்டு வந்தது.
இந்த சீசனில் கேப்டன் பதவியில் இருப்பவர்கள் ஏதெனும் தவறு செய்தால் அவர்களது கேப்டன் பதவி பறிக்கும் உரிமையை போட்டியாளர்களுக்கு கொடுத்துள்ளார்.
இந்த வாரம் ஜெஃப்ரி கேப்டனாக உள்ள நிலையில் அவரது பதவியும் பறிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது ஜெஃப்ரி மற்றும் தர்ஷிகா இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
போட்டியாளர்களில் சிலர் தர்ஷிகாவிற்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |