வீட்டை இழந்த சினேகன்... 13 நாள் ஹோட்டலில் தங்கிய அவலம்!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் வீட்டை இழந்து 13 நாள் ஹோட்டலில் தங்கிய அவலம் பிக் பாஸ் புகழ் சினேகனுக்கு நடந்துள்ளது.
அண்மையில் அவர் நேர்காணல் ஒன்றில் இது குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பது,
#Snehan About His Wife pic.twitter.com/AmscrZYlUa
— chettyrajubhai (@chettyrajubhai) December 22, 2021
நான் என் வாழ்க்கையில் அடிபட்டேன் என்பதை விட இன்னும் அடிபட்டுக் கொண்டு தான் இருக்கிறேன்.
என் நண்பர்களும், என்னை சுற்றி இருப்பவர்களாலும் நான் நிறைய ஏமார்ந்து இருக்கிறேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் நண்பர்களால் நான் ஏமாற்றப்பட்டு இருக்கிறேன்.
தொழிலில் எல்லாம் நான் ஓடிப் பிடித்து சாதித்து விடுவேன். சாவுற வரைக்கும் என்னுடைய தொழிலை விட மாட்டேன். ஆனால், நட்பால் நான் நிறைய துரோகத்தை சந்தித்து இருக்கிறேன்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து நான் வெளியே வந்த பிறகு என்னுடைய இரண்டு வீடு, கார் என எதுவும் இல்லை. என் நண்பன் செய்த துரோகத்தால் எல்லாமே இழந்தேன்.
13 நாள் நான் வீட்டுக்குள் போக முடியாத அளவுக்கு ஹோட்டலில் தங்கி இருந்தேன். ஆனால், அவர்கள் மீது நான் எந்த ஒரு சட்ட ரீதியாக புகார் எடுக்கவில்லை. மறுபடியும் நான் அதே மாதிரி புது கார், வாங்கி அதே வீட்டுக்குள் போனேன் என்றார்.
பிறகு காதல் மனைவி குறித்தும் உருக்கமாக பேசியுள்ளார்.