வெளியே வந்த பின்பு இந்த ஜோடிகளுக்கு திருமணமா? பிக்பாஸில் நள்ளிரவில் உடைந்த காதல் கதை
பிக்பாஸ் வீட்டில் நள்ளிரவில் போட்டியாளர்களிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை பிக்பாஸில் காதல் ஜோடி இருக்கின்றனரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார டாஸ்க் சில கொமடியான நிகழ்வில் சென்று கொண்டிருக்கின்றது. போட்டியாளர்களிடையே டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் இடையே சில விவாதமும் சென்று கொண்டிருக்கின்றது.
பிக்பாஸில் ஜிபி முத்து, சாந்தி, அசல் கோலார், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி உள்ளிட்ட போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து அடுத்தடுத்து வெளியேறியுள்ளனர்.
ஷிவின் விக்ரமன் காதலா?
இந்த வாரம் கொடுக்கப்பட்ட நீதிமன்றம் டாஸ்க் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இரவில் போட்டியாளர்கள் பேசிய விடயம் பார்வையாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரவு நேரத்தில் அமுதவாணன், ஷிவின், ஜனனி மற்றும் தனலட்சுமி ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது விக்ரமன் மற்றும் ஷவின் பற்றி அவர்கள் பேசி கொண்டிருக்க, "உன் ஆளு விக்ரமன்னு தெரியும்" என தனலட்சுமி ஷிவினிடம் கூற, ஜனனியும், "உன் லவ்வர் விக்ரமன்னு தெரிஞ்சு போச்சு" என்கிறார்.
இது தொடர்பான கருத்து நீண்டு கொண்டே சென்ற போது, அமுதவானன் ஜனனிக்கு அண்ணன் மாதிரி தானே என்று தனலட்சுமி கூற, இதற்கு ஜனனியும் ஆமாம் என்றுபதில் அளித்துள்ளார்.
தனலட்சுமி, அதே போல உனக்கும் அவருக்கும் இருக்கும் உறவு என்ன என ஷிவினிடம் கேட்டுள்ளார். இதற்கு ஷிவின், அவர் எனக்கு அண்ணன் மாதிரி என கூற, "வாங்கோண்ணா, போங்கோண்ணா அந்த மாதிரி அண்ணாவா?" என சிரித்துக் கொண்டே கேட்கிறார் ஜனனி.
ஷிவின் தன்னை தான் அண்ணன் என கூறுவதாக அமுதவாணன் விளக்க, "இல்லை, விக்ரமனை தான் அப்படி சொல்கிறார்" என ஜனனி விளக்கம் கொடுக்கிறார். இதற்கிடையே பேசும் தனலட்சுமி, "வெளிய போய் ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கோங்க" என்று கூறியுள்ளது தெரியவந்துள்ளது.