குழந்தை இல்லாமல் கதறிய நடிகர் சென்ராயனுக்கு இவ்வளவு பெரிய மகனா? எப்படி வளந்துட்டாங்கனு பாருங்க
நடிகர் சென்ராயன் தனது இரண்டு மகன்களுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த சென்றாயனுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இரண்டு குழந்தைகள் பிறந்தது.
நடிகர் சென்ராயன், தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் தோன்றி இப்போது மக்களுக்கு பரிட்சயமான ஒரு காமெடி நடிகராக திகழ்ந்து வருகிறார்.

அதிலும், பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்களில் பேராதரவை பெற்று மேலும் பிரபலமடைந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு குழந்தை இல்லை என்பதை கூறி கண்ணீர் விட்ட காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.
அதேவேளை, இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்த போதே அவர் மனைவி பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொன்ன போது ‘நான் அப்பா ஆகிட்டேன் டா ‘ என்று ஆனந்த கண்ணீரில் கதறி அழுதது பலரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில் இவருக்கு தற்போது 2 குழந்தைகள் உள்ளனர். முதல் முறையாக தனது மகன்களை சென்றாயன் காட்டி இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர். சென்றாயனின் குழந்தை இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டாரா என்று.