பிக் பாஸ் அனுப்பிய எதிர்பாராத பரிசு... வைல்டு கார்டு என்ட்ரியாகிறாரா சின்னத்திரை பிரபலம்?
பிரபல ரிவி பிரபலமான நாஞ்சில் விஜய்க்கு பிக் பாஸ் பசிசு ஒன்றினை அனுப்பியுள்ள நிலையில், அவர் வைல்டு கார்டு எண்ட்ரிக்கு செல்கின்றாரா என்ற கேள்வி எழுப்பியுள்ளது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் கடந்த 1ம் தேதியிலிருந்து கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 16 போட்டியாளர்கள் காணப்படுகின்றனர்.
முதல் போட்டியாளராக அனன்யா வெளியேற்றப்பட்ட நிலையில், பவா செல்லத்துரையும் நேற்றைய தினம் வெளியேறியுள்ளார்.
அடுத்து வைல்டு கார்டு் எண்ட்ரியாக பிரபலம் உள்ளே வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
அதற்கு பதில் கொடுக்கும் வகையில் நாஞ்சில் விஜய் காணொளி ஒன்றினை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
குறித்த காட்சியில் பிக் பாஸிலிருந்து பரிசு ஒன்று வந்துள்ளதையும், அதனை பிரித்து என்னவென்று பார்ப்பதை காணொளியாக பதிவிட்டுள்ளார்.
ஆனால் அந்த பார்சல் உள்ளே என்ன இருந்தது என்பது வெளியே காட்டவில்லை. இதிலிருந்து நாஞ்சில் விஜய் வைல்டு கார்டு என்ட்ரியாக வருகின்றார் என்பதை ரசிகர்கள் யூகித்து வருகின்றனர்.
மற்றொரு புறம் தற்போது தான் இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்ற நிலையில், மனைவியை விட்டு பிக்பாஸிற்குள் வருவாரா என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |