ஒன்றல்ல இரண்டு... புதிய குண்டை தூக்கிப் போட்ட கமல்: இந்த வாரம் வெளியேறப் போகும் இரண்டு போட்டியாளர்கள்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியாகும் போட்டியாளர்கள் குறித்து புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 7
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்தவகையில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி 20 போட்டியாளர்களுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது.
இந்தப் போட்டியில் யுகேந்திரன், பிரதீப் அண்டனி, அனன்யா ராவ், விணுஷா, பாவா செல்லதுரை, நிக்சன், சரவண விக்ரம், கூல் சுரேஷ், ஜோவிகா, மாயா, பூர்ணிமா ரவி, யுகேந்திரன், விசித்திரா, அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, விஜய் வர்மா போன்ற போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளர்.
வழக்கம் போல் இல்லாமல் இந்த சீசன் பிக்பாஸ் மற்றும் சின்ன போஸ் என இரண்டு வீடுகளை பிரித்து வைத்து போட்டியாளர்களையும் பிரித்து காய் நகர்த்திக்கொண்டிருக்கிறார்.
இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பித்து முதல் வாரம் கடக்கவுள்ள நிலையில், இன்று ஒரு போட்டியாளர் பிக்பாஸ் வீட்டியிலிருந்து வெளியேறுவார் என்று நேற்றையப் ப்ரோமோ வெளியாகியிருந்தது.
இந்நிலையில், இன்று வெளியானப் ப்ரோமோவில் குண்டைத் தூக்கிப் போடுவது போல் வீடு இரண்டு என்றால் வீட்டிலிருந்து வெளியேறும் போட்டியாளர்களும் இரண்டு பேராகத்தான் இருக்க வேண்டும் என்று டுவிஸ்ட் வைத்திருக்கிறார்.
மேலும், போட்டியாளர்கள் பிரதீப் ஆண்டனி மற்றும் பாவா செல்லதுரை தான் செல்லப்போகிறார்கள் என்று அவர்களுக்குள்ளேயே தெரிவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |