பிக்பாஸ் நிகழ்ச்சியை துவங்குவதில் வந்த புது சிக்கல்! ப்ரோமோவை வெளியிடுவார்களா? கமலின் முடிவு தான் என்ன?
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கான ப்ரோமோ ஷீட்டிங் இடம்பெற்று விட்டதாகவும் ஆனால் இதனை தொடர்ந்து நடத்துவதில் தான் சில சிக்கல்கள் இருக்கின்றது என வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 7ல் குழப்பம்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக செல்லும் ஷோக்களில் ஒன்று தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிறார்.
மேலும் பிக்பாஸில் பல சின்னத்திரை பிரபலங்கள், மீடியா பிரபலங்கள் கலந்து கொள்வார்கள். இதனால் கோடிக்கணக்கான மக்கள் இந்த ஷோவை பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
ஏதாவது ஒரு கேள்வி பிழையாகி விட்டால் நெட்டிசன்கள் வைத்து செய்து விடுவார்கள். இதன் காரணமாக இந்த ஷோவை சற்று கவனமாக கமல் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
ஆர்வம் காட்டும் போட்டியாளர்கள்
இந்த நிலையில் கடந்த சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 7 ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து துவங்க உள்ளது.
இதில் கலந்து கொள்வதற்காக போட்டியாளர்களின் ஆடிஷன் வேலைகள் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
அந்த வகையில், உமா ரியாஸ், KPY சரத், தொகுப்பாளர் மாகாபா, நடிகை ரேகா நாயர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், சீரியல் பிரபலங்கள், மாடல்கள், மற்றும் இசை கலைஞர்கள் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாவதற்கு பிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
கமலினால் தடைப்படும் பிக்பாஸ்
இதேவேளை, ப்ரோமோவிற்கான ஷீட்டிங் வேலைகள் சிறப்பாக முடிந்து விட்டது என்றும் ஆனால் ப்ரோமோ வெளியிடுவதில் தான் சிறுசிறு குழப்பங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் அடுத்தடுத்து 4 திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார்கள். இயக்குனர் எச்.வினோத் மற்றும் ப்ராஜெக்ட் கே படத்திற்காக கமலை வெளிநாடுகளுக்கு அழைத்து சென்று விட்டால் கமல்ஹாசன் அடுத்த வாரம் நிகழ்ச்சிக்கு வர மாட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வழமையாக கமல் கேட்கும் சம்பளத்தை விட இந்த தடவை அதிகளவு சம்பளம் கேட்டுள்ளாராம்.
மேலும் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதால் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு அரசியல் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |