பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் கொடுத்த வார்னிங்... மாஸ் காட்டும் புதிய ப்ரொமோ
பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 7 விரைவில் ஆரம்பமாக உள்ள நிலையில் அடுத்தடுத்த ப்ரொமோ காட்சி வெளியாகி வருகின்றது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் நடைபெறும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் 6 சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது ஏழாவது சீசன் தொடங்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் இந்த மாதம் 7வது சீசன் தொடங்க இருக்கும் நிலையில், இதில் கலந்து கொள்ள இருக்கும் சில போட்டியாளர்கள் குறித்த தகவல் அவ்வப்போது வெளியாகி வருகின்றது.
சீசன் 7ல் ஜாக்குலின், ரச்சிதாவின் கணவர் தினேஷ், நடிகை ரேகா நாயர், நடிகர் பிருத்விராஜ், கோவை சேர்ந்த பெண் ஓட்டுனர் ஷர்மிளா ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகின்றது.
ரசிகர்கள் யூகித்தது போன்று இந்த சீசனில் இரண்டு வீடுகள் இருப்பதாக ப்ரொமோவில் கமல் கூறியிருந்தார். தற்போது மீண்டும் ஒரு ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
அதில் கமல்ஹாசன் இரண்டு வீடு என்று கூறியதற்கு மற்றொரு கமல் சின்னவீடா? என்று இரட்டை அர்த்தத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கேள்வி கடந்த சில சீசன்களில் காதல் என்ற பெயரில் ரசிகர்கள் பல செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
தற்போது அதனை மனதில் வைத்துக்கொண்டும், போட்டியாளர்களுக்கு வார்னிங் கொடுப்பது போன்றும் இந்த ப்ரொமோ காட்சி அமைந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |