பிக் பாஸிலிருந்து அதிரடியாக வெளியேறிய பெண் போட்டியாளர்... கடைசி நேரத்தில் அரங்கேறிய ட்விஸ்ட்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் ஆளாக அனன்யா ராவ் ஸ்மால் வெளியேறியுள்ளதாக தவகல்கள் கூறப்படுகின்றது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் கடந்த ஞாயிற்று கிழமை ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதன் தொகுப்பாளராக இந்த ஆண்டும் கமல்ஹாசனே இருந்து வருகின்றார். உள்ளே சென்ற முதல் நாளே 6 போட்டியாளர்கள் வேறு வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.
ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே சண்டையும், சச்சரவுமாக ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸில் இன்று முதல் எவிக்ஷன் நடைபெற்றுள்ளது.
வெளியேறியது யார்?
நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளே இரு குழுக்களாக போட்டியாளர்கள் பிரிந்து விட்டனர். எழுத்தாளர் பவா செல்லத்துரை, ஜோவிகா உள்ளிட்ட சிலர் இரண்டாவது வீட்டிற்குச் சென்றனர்.
பின்பு விதியை மீறியதற்காக யுகேந்திரன், விசித்ராவும் இவர்களுடன் சேர்ந்தனர். தற்போது பிக்பாஸ் எவிக்ஷனில் ரவீனா, ஐசு, பிரதீப், ஜோவிகா காப்பாற்றப்பட்டனர்.
கடைசியாக யுகேந்திரன் மற்றும் அனன்யா இருந்த நிலையில், இருவருக்கும் டாஸ்க் ஒன்றினை வைத்து அனன்யாவை வெளியேற்றி உள்ளனர்.
அனன்யா வீட்டில் அனைத்து வேலைகளையும் இழுத்துபோட்டு செய்த நிலையில், இவரை வெளியேற்றியுள்ளது நியாயமில்லை என்று ரசிகர்கள் அதிருப்தியில் காணப்படுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |