சூடுபிடிக்கப்போகும் பிக்பாஸ் 6 போட்டியாளர்கள் லீக்... பாடகியின் முன்னாள் கணவரும் வருகிறாரா?
தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை 5 சீசன்கள் நிறைவடைந்த நிலையில், 6வது சீசன் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியையும், சிம்பு தொகுத்து வழங்குவார் என கூறப்பட்ட நிலையில், கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார் எனக்கூறப்படுகிறது.
மேலும், இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொள்ள உள்ளவர்கள் குறித்த தகவல் அவ்வப்போது வெளியே வந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிடி கலந்துகொள்ள இருப்பதாகவும், அவர் மட்டுமல்லாமல் விஜய் டிவி சீரியல் நடிகர் அசீம் இந்த நிகழ்ச்சி பங்கேற்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்து யாரடி நீ மோகனி, வெப்பம் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் கலக்கிய சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் கலந்துகொள்ளப்போவதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் இவர் இரண்டாவதாக அம்ருதா ஸ்ரீநிவாசனை திருமணம் செய்துகொண்டிருந்தார். இவர்களை தொடர்ந்து ஏற்கனவே கூறிய போல், ராஜலட்சுமி, ரக்ஷன் என பலரின் பெயர் அடிப்பட்டு வருகிறது.