பிக்பாஸ் சீசன் 6ல் கலந்துகொள்ளும் குக்வித் கோமாளி பிரபலங்கள் - பயங்கர எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்
தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை 5 சீசன்கள் நிறைவடைந்த நிலையில், 6வது சீசன் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியையும், சிம்பு தொகுத்து வழங்குவார் என கூறப்பட்ட நிலையில், கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார் எனக்கூறப்படுகிறது.
மேலும், இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொள்ள உள்ளவர்கள் குறித்த தகவல் அவ்வப்போது வெளியே வந்துகொண்டிருக்கிறது.
அந்த வகையில், தொகுப்பாளர் ரக்ஷன் கலந்துகொள்ள உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அதேப்போல் குக்வித் கோமாளி புகழ் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இவர்களை தொடர்ந்து, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ராஜலட்சுமி பிக்பாஸ் சீசன் 6-ல் போட்டியாளராக கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் தொடங்கப்படும் எனக்கூறப்படுகிறது.