பிக்பாஸ் வீட்டிற்குள் இந்த புதுமணத் தம்பதிகளா? பரபரப்பில் ரசிகர்கள்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 6ல் புதுமணத் தம்பதிகளான ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 6
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்து சீசன்கள் முடிவடைந்து வரும் அக்டோபர் மாதம் 6வது சீசன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சீசனில் டி இமானின் முன்னாள் மனைவி, தொகுப்பாளினி டிடி, குக் வித் கோமாளி ரோஷினி, சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி உள்பட பலர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்ட தயாரிப்பாளர் ரவீந்தர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.
எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அவ்வப்போது அப்டேட் தெரிவித்துவரும் டுவிட்டர் பயனாளி ஒருவர் இதுகுறித்து புகைப்படங்களுடன் தகவல்கள் வெளியிட்டுள்ள நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த ரவீந்தர் பலமுறை தனது விவாதங்களை முன்வைத்து பிரபலமானார். தற்போது இவரே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல இருப்பது இன்னும் சுவாரசியத்தை அதிகரிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
அதுமட்டுமின்றி ரவீந்தர் - மகாலட்சுமி திருமணம் குறித்தும் பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வரும் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் இதுகுறித்து அவர் வெளியிடும் கருத்துக்களை கேட்க ரசிகர்கள் ஆர்வத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.