பிக்பாஸ் சீசன் 6 : நடிகர் கமல் உடைத்த உண்மைகள்! தொகுப்பாளர் யார்?
பிக்பாஸ் சீசன் 6ஐ குறித்து கமல் கொடுத்துள்ள தகவல் தற்போது வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் நிகழ்ச்சி
பிரபல ரிவியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்ற வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு, மக்களை மகிழ்வித்து வந்தனர்.
இதில் பல போட்டியாளர்கள் மக்கள் மனதில் நீங்கா இடமும் பிடித்து, தற்போது சினிமாவில் நடித்து பிஸியாக காணப்படுகின்றனர்.
ஐந்து சீசன்களை பிரபல ரிவி ஒளிபரப்பான நிலையில், இந்த ஐந்து சீசன்களையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
பின்பு ஐந்து சீசன்களில் விளையாடிய பிரபலமான போட்டியாளர்களை பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் களமிறக்கினர்.
இந்த நிகழ்ச்சியில் சில நாட்கள் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், பின்பு படப்பிடிப்பில் பிஸியானதால் நடிகர் சிம்பு களமிறங்கினார்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி பிரபல ரிவியில் ஒளிபரப்பப்படாமல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேர நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு பிரபலமாகியது.
பிக்பாஸ் சீசன் 6 எப்போது?
பிக் பாஸ் 6 நிகழ்ச்சி வரும் ஜூலை மாத இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் முதல் பாதியிலோ துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விக்ரம் படத்தின் சக்ஸஸ் மீட்டில் பங்கேற்ற கமல் பிக்பாஸ் 6 குறித்து பேசியுள்ளார். அதில் ‘ பிக்பாஸ் சீசன் 6 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், நான் தொகுத்து வழங்குவேன் என்று கமல் ஹாசன் கூறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகுமா என்று பலருக்கும் கேள்வி எழுந்த நிலையில், தற்போது கமல் நிகழ்ச்சியைக் குறித்து கூறியுள்ள தகவல் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.