பிக்பாஸ் சீசன் 6 ல் ஏற்பட போகும் அதிரடி மாற்றம் - இப்படி ஒரு சர்ப்ரைசா? ஹாட் தகவல்
பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் - சிம்பு இருவரும் சேர்ந்து தொகுத்து வழங்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 6 அக்டோபர் மாதம் துவங்க உள்ளதாக முதலில் தகவல் வெளியானது.
தற்போது நவம்பர் மாதத்திற்கு நிகழ்ச்சி தள்ளி போவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குவதாக சொல்லப்பட்டாலும், கமலை விட சிம்பு தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் பலர் கருதுவதாக சொல்லப்படுகிறது.
ஆனால் கமல், சிம்பு இருவரும் அடுத்தடுத்த பட வேலைகளில் பிசியாக இருக்கிறார்கள்.
இப்படி ஒரு சர்ப்ரைசா
லேட்டஸ்ட் தகவலின் படி, ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கமல் - சிம்பு இருவரும் சேர்ந்து பிக்பாஸ் சீசன் 6 ஐ தொகுத்து வழங்க போகிறார்களாம்.
பார்க்கலாம் இறுதி நேரத்தில் எதுவும் மாறலாம்.