வனிதாவை நேருக்கு நேர் மோதிய பிரபலங்கள்: பிக்பாஸிற்குள் எண்ட்ரியா? குழப்பத்தில் ரசிகர்கள்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியினை மக்கள் பயங்கர எதிர்பார்ப்புடன் காத்திருப்பதுடன், இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்து வருகின்றனர்.
பிரபல ரிவியில் வெற்றிகரமாக 4 சீசன்கள் முடிந்த நிலையில், ஐந்தாவது சீசன் விரைவில் ஆரம்பமாக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
குறிப்பாக இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் இரண்டு திருநங்கைகள் செல்கின்றனர் என்ற தகவல் வெளியாகிய நிலையில், தற்போது மற்றொரு தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இம்முறை பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் கட்டாயம் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் பிக்பாஸ் புரோமோ சூட் துவங்கி விட்டதாக ஒரு புகைப்படமும் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது.
ஆம் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகையாகவும் திகழும் லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆகிய இருவரும் பிக் பாஸ் சீசன் 5 வில் பங்கேற்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவங்க இரண்டு பேரும் வனிதா அக்காவையே கதறவிட்டவங்க ஆச்சே என நெட்டிசன்கள் மீம்ஸ்களை வைரலாக்கி வருகின்றனர்.
ஆனால் இவர்கள் இருவரும் தங்களது வேலையில் பரபரப்பாக செயல்பட்டு வரும் நிலையில், உள்ளே செல்வது என்பது சந்தேகம் ஆதலால் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்து வருகின்றனர்.