பிக்பாஸ் 5 சீசனில் நுழையும் அடுத்த இரண்டு மாடல் பிரபலங்கள் இவர்கள் தானாம்.... உறுதியாக வெளியே கசிந்த தகவல்!
தமிழில் ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன டிவி என்றால் அது விஜய் டிவி தான். சூப்பர் சிங்கர் முதல் காமெடி, கேம் ஷோ வரை இவர்களின் அனைத்து ரியாலிட்டி ஷோக்களும் ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளது.
இதேல்லாம் தவிர, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி டிஆர்பி-யில் எப்போதுமே முதலிடத்தை பிடிக்கும். கடந்த 4 சீசன்களாக கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில் 5வது சீசனையும் அவரே தொகுத்து வழங்குகிறார்.
5வது சீசன் எப்போது என்ற கேள்வி எழுந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி அதுதொடர்பான ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் எந்தெந்த நட்சத்திரங்கள் எல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், பிக்பாஸ் சீசன் 5-ல் சார்பட்டா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த சந்தோஷ் பிரதாப் மற்றும் கோபிநாத் ரவி என்ற மாடல் பிக்பாஸில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி வருகிறது.
இவர் ஒரு பாடி பில்டர் என்றும் கூறப்படுகிறது. எனவே, இந்த சீசனிலும் ஒரு பாடி பில்டரா என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
Imadh என்ற ட்விட்டர் யூசர் வெளியிட்ட பதிவில், "கோபிநாத் ரவி பிக்பாஸ் தமிழ் சீசன்-5 ல் நுழைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று கேப்ஷன் செய்துள்ளார். இதன் பின்னர், பிரதாயனி சுர்வா என்ற மாடல் அழகியும் கலந்துகொள்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது.....
Looking forward #GopinathRavi into #biggbosstamil5#biggbosstamil https://t.co/qnIW3pnkWU pic.twitter.com/JzsWqpC2ZZ
— Imadh (@MSimath) September 5, 2021