பிக்பாஸ் சீசன் 5ல் குக் வித் கோமாளி அஸ்வின்? குஷியில் ரசிகர்கள்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே பெரும் பொழுதுபோக்காகவும், கவர்ந்த நிகழ்ச்சியாகவும் இருந்து வந்தது.
கடந்த ஆண்டு சீசன் 4 முடிவடைந்த நிலையில், தற்போது ஐந்தாவது சீசன் தொடங்கிவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சீசனில் கலந்து கொள்ளவிருக்கும் பிரபலங்கள் யார் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கும் நிலையில், தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஆம் இந்த சீசனில் பிரபல ரிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி பிரபலமான அஸ்வின் கலந்துகொள்வது உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனை அறிந்த ரசிகர்கள் அஸ்வினுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அஸ்வின், ஷிவாங்கியின் ஜோடி பயங்கரமாக ரசிகர்களிடையே புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது.
