விக்ரமா? ரவீனாவா? இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர்- வெளியான உறுதியான தகவல்
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போகும் போட்டியாளர் பற்றி தகவல் சமூக வலைத்தளங்களில் பெரும் எதிர்ப் பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் 7
தமிழில் அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 75 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா, ரவீனா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், விக்ரம், மாயா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா, மணி, வினுஷா, யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.
இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா, கூல் சுரேஷ் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.
கடந்த வாரம் கூல் சுரேஷ் சுவர் ஏறி குதிக்க முயற்சி செய்த காரணத்தினால் வாக்குகள் குறைவு என வெளியேற்றியுள்ளனர்.
அந்த வாரம் நிக்ஷன் வெளியேறுவார் என எதிர்பார்த்த நிலையில் யாரும் எதிர்பாராமல் கூல் சுரேஷ் வெளியேறியுள்ளார்.
வெளியேறப் போகும் போட்டியாளர்
இந்த நிலையில் இந்த வாரம் அனைவரும் எதிர்பார்த்த Family Round துவங்கி இருக்கிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அர்ச்சனா, பூர்ணிமா, விஜய் வர்மா, விக்ரம், ரவீனா, விஷ்ணு, விசித்திரா, மாயா, மணி, ரவீனா ஆகியோரின் குடும்பத்தினர் வந்து இருந்தனர்.
இதில் மணி- அம்மா ரவீனாவின் பிறந்த திகதி கேட்டு அதிலிருந்து மகனின் வயதை ஓப்பிட்டு பார்த்து வயது வித்தியாசம் கூறியிருந்தார். ஆனால் ரவீனாவின் சித்தி மணி கடுமையாக சாடியிருந்தார்.
இப்படியாக பிரீஷ் டாஸ்க் அதிரடியாக சில பல வேலைகளை செய்திருந்தது. இந்த வாரம் நாமினேஷன் படி குறைவான வாக்குகளை பெற்று ரவீனா வெளியேறுவார் என எதிர்பார்த்த நிலையில் குடும்பத்தினர் வீட்டிற்குள் வந்து புது பூகம்பத்தை கிழப்பி விட்டு சென்றுள்ளனர்.
இதனால் மணி - ரவீனாவின் செயற்பாடுகளை பிக்பாஸ் வீட்டில் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனை காரணமாக வைத்து ரவீனாவை தவிர்த்து விக்ரமை வெளியேற்றலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
இந்த செய்தி வோர்ட்டிங் லிஸ்ட்டுடன் வெளியான நிலையில், “டைட்டில் வின்னர் சரவண விக்ரம். இப்படியொரு நிலைமையா?” என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |