Bigg Boss: ப்ரஜன் காதில் சான்ட்ரா கூறிய சீக்ரெட்... அனைத்தையும் வெளியே கசிய விட்ட அட்மின்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பணப்பெட்டி எடுப்பது குறித்து சான்ட்ரா ப்ரஜனிடம் சில விடயங்களை ரகசியமாக கூறியுள்ளார். ஆனால் அந்த ரகசியம் அனைவரும் கேட்கும்படியாகவே இருந்தது..
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சில தினங்களில் முடிவிற்குவரும் சூழ்நிலையில், பொங்கல் கொண்டாட்டத்திற்காக போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் உள்ளே சென்றுள்ளனர்.
கடைசியாக 4 போட்டியாளர்கள் உள்ள நிலையில், இவர்களில் வெற்றியாளர் யாராக இருப்பார்? என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது.

இன்னும் சில தினங்களில் நிகழ்ச்சி முடிவடைய இருந்தாலும் போட்டியாளர்களின் சண்டை மட்டும் குறைந்தபாடுல்லை. ஆம் காலையில் திவாகர், ரம்யா சண்டை... திவாகர் பிரவீன் ராஜ் சண்டை, பாத்ரூமில் குளிப்பதற்கு சபரி, ஆதிரை இருவருக்கும் சண்டை என நீண்டு கொண்டே செல்கின்றது.
இந்நிலையில் சான்ட்ரா ப்ரஜன் காதில் ரகசியம் ஒன்றை கூறியுள்ளார். ஆனால் அவர் ரகசியம் என்று கூறியதை அட்மின் பார்வையாளர்கள் கேட்கும் வகையில் வெளியே கசிய விட்டுள்ளார்.
அதாவது பணப்பெட்டியை சான்ட்ரா எடுப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர் என்றும் அத்தருணத்தில் திவ்யா நல்ல வாயன் சம்பாதிக்க... நார வாயன் திங்கிறான் என்ற பாடலை பாடியுள்ளார்.
இதனால் கடுப்பான சான்ட்ரா பணப்பெட்டியை எடுக்கவில்லை என்று ப்ரஜனிடம் கூறியுள்ளார். சான்ட்ராவின் நடவடிக்கையைப் பார்த்த பார்வையாளர்கள் கொதித்து போயுள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |