Super Singer: சூப்பர் சிங்கரில் யாரும் எதிர்பாராத சர்ப்ரைஸ்... 7-வதாக செல்லும் பைனலிஸ்ட் யார்?
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ஒளிபரப்பாகிவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தற்போது 7வது பைலிஸ்ட் அறிமுகம் செய்யும் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
சூப்பர் சிங்கர் 11
பிரபல ரிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகிவரும் சூப்பர் சிங்கர் சீசன் 11 தற்போது இறுதி கட்டத்தை நோக்கிச் சென்றுள்ளது.
பல வாரங்கள் கடுமையாக நடைபெற்ற இந்த பேட்டியில் இதுவரை ஐந்து போட்டியாளர்கள் பைனலிஸ்ட்டுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் மட்டுமின்றி இலங்கை போன்ற நாடுகளில் இருந்து கலந்து கொண்டு தங்களது குரல் திறமையினை வெளிக்காட்டி நடுவர்களையும், பார்வையாளர்களையும் கவர்ந்து வருகின்றனது.

ஒவ்வொரு வாரமும் எதிர்பாராத பல திருப்பங்கள் மற்றும் உணர்ச்சிகரமான தருணங்கள் நடைபெற்றுவரும் நிலையில், கடந்த வாரம் ஐந்தாவது பைனலிஸ்டாக சரண்ராஜா தேர்வு செய்யப்பட்டு ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.
நிகில், திஷாதனா, மீனாட்சி, தவசீலி, சரண்ராஜா இவர்களைத் தொடர்ந்து வைல்டு கார்டில் மீண்டும் போட்டியிட்ட தர்ஷனா ஆறாவது பைனலிஸ்டாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதில் மற்றொரு இன்பஅதிர்ச்சி என்னவெனில் ஏழாவதாக ஒரு பைனலிஸ்ட் செல்கின்றார். அதாவது வைல்டு கார்டு சுற்றில் மீண்டும் சென்ற பாலாபிரியா, ஆபிரகாம் நித்யா பாண்டியன், ஃபர்ஹான், அன் பென்சன் இவர்களில் யாராக இருப்பர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |