நடித்தபோது கிடைக்காத மக்களின் அன்பு... பிக்பாஸ் சான்ட்ரா Exclusive LIVE வைரல்!
பிக்பாஸ் சீசன் 9 இன் போட்டியானர் சான்ட்ரா விஜய் தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள பேட்டியில், பிக்பாஸ் வீட்டில் தான் அனுபவித்த எமோஸ்னல் சம்பங்கள் மற்றும் வெளியேறியவுடன் முதலில் என்ன செய்தார் என்பது குறித்து வெளிப்படையாக பேசிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ்
ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வரும் ஒரு முக்கிய நிகழ்ச்சியான பிக்பாஸ் 8 சீசன்களை கடந்து, சமீபத்தில் தனது 9 ஆவது சீசனையும் வெற்றிகரமாக நிறைவு செய்திருந்தது.

பிக்பாஸ் சீசன் 9 சமீபத்தில் தான் பிரம்மாண்டமான கிராண்ட் பினாலேயுடன் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. இந்த சீசனின் டைட்டில் வெற்றியாளராக திவ்யா கனேஷ் அறிவிக்கப்பட்டார்.

பிக் பாஸ் சீனன் 9 இல் இறுதிசுற்றுக்கு சான்ட்ரா செல்வார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நேரத்தில், இறுதிச்சுற்றுக்கு செல்லப்போகும் போட்டியாளர்கள் 5 பேர் இல்லை 4 பேர் தான் என அதிரடி முடிவு எடுக்கப்பட்டு, யாரும் எதிர்ப்பார்க்காத வகையில், சான்ட்ரா வெறியேற்றப்பட்டார்.

அதனை தொடர்ந்து கிராண்ட் பினாலேயில்,ரெட்கார்டுடன் வெளியேறிய பார்வதி, கமருதீன் உட்பட அனைத்து போட்டியாளர்களும் அழைக்கப்பட்டு பிரம்மாண்டமாக இந்த சீனன் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 9 இல் முக்கிய போட்டியாளர்களுள் ஒருவராக இருந்து அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட சான்ட்ரா விஜய் தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள Exclusive LIVE காணொளி தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |