தனது நண்பரை பார்த்து நெகிழ்ந்த இலங்கை ஜனாதிபதி! வைரலாகும் காணொளி
இலங்கை ஜனாதிபதி (அதிபர்) அநுர குமார திஸாநாயக்க சமீபத்தில் அனுராதபுரத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது, தனது நண்பரிடம் பேசிய காட்சியடங்கிய காணொளி தற்போது இணையத்தில் படு வைரலாகியுள்ளது.
தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்த இலங்கையின் ஜனாதிபதி கூட்டத்தில் நின்று கொண்டிருந்த தனது நண்பரை பார்த்ததும் தனது பதவியை சற்றும் பொருட்படுத்தாமல், அவரை அழைத்து பேசும் காணொளி மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த காணொளியில் ஜனாதிபதி நண்பரை பார்த்தும், "ஆ ராஜா! நான் உன்னைத் தேடிக்கொண்டிருந்தேன்..." என மிக எளிமையாக பேசும் காட்சி இணையத்தில் வைரலாகி, உயர் பதிவில் இருந்தும் நண்பரை மறக்காத அவரின் சிறந்த குணம் குறித்து மக்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |