என்னது ராபர்ட் மாஸ்டருக்கு கேன்சரா? பிக்பாஸில் உளறிய உண்மை! குழப்பத்தில் ரசிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு கேன்சர் இருப்பதாக ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவின் தலையில் அடித்து சத்தியம் செய்துள்ளது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
ராபர்ட் ரச்சிதா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் அனைத்து போட்டியாளர்களையும் கடுமையாக சாடி பேசியுள்ள நிலையில் ரசிகர்கள் அதனை அவதானிக்க ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
வீட்டிற்குள் கடும் சண்டையை போட்டு அசீம் வெளியே ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக வைத்துள்ளார். வாரத்தில் முதல் ஆளாக சேவ் ஆகிவரும் அவர் இந்த வாரமும் வாக்கு அடிப்படையில் முன்னிலையில் இருக்கின்றார்.
இதற்கு மத்தியில் பிக்பாஸ் வீட்டில் ரச்சிதாவிற்கு லவ் டார்ச்சர் கொடுத்துக் கொண்டிருக்கும் ராபர்ட் மாஸ்டர் உண்மை ஒன்றினை உடைத்துள்ளார்.
சமீப நாட்களாக ரச்சிதாவை உடல் சுருங்கி போயிட்டா... அ்ந்த பச்சை கலர் ப்ளவுஸ் போட்டுப் பாரு... என்று கூறி தொந்தரவு செய்து வருகின்றார்.
கேன்சர் என்று கொடுத்த ஷாக்
இந்நிலையில் ராபர்ட் மாஸ்டர் தனக்கு கேன்சர் இருப்பதாகவும், பிக்பாஸ் வீட்டிலிருந்து சென்ற பின்பு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்து விடுவேன் என்று கூறினார்.
உடனே ரச்சிதா பொய் என்று கூறியதால், உண்மை என்று அவரது தலையில் அடித்து சத்தியம் செய்துள்ளார் ராபர்ட் மாஸ்டர்... ரச்சிதாவின் தலையிலேயே ராபர்ட் மாஸ்டர் சத்தியம் செய்துள்ளதால் ரசிகர்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.