போன் நம்பரைக் கேட்டு விடாமல் தொந்தரவு செய்த ராபர்ட்! ரச்சிதா அளித்த பதிலடி என்ன?
பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு வாரமாக ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவிடம் போன் நம்பர் கேட்டு வரும் நிலையில், அதற்கு ரச்சிதா என்ன பதில் கொடுத்துள்ளார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
பின்பு ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி என ஆறு போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில் தற்போது 15 போட்டியாளர்கள் உள்ளே விளையாடி வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற ராஜகுடும்பம் டாஸ்கில், ரச்சிதா தன்னை ஏமாற்றிவிட்டதாக ராபர்ட் கதறியழுது, பின்பு சமாதானம் ஆகினார்.
போன் நம்பர் கேட்டு தொல்லை
இந்நிலையில் ரச்சிதாவிடம் போன் நம்பரைக் கேட்டு ராபர்ட் மாஸ்டர் தொல்லை கொடுத்துள்ளார். ரச்சிதா கிச்சனில் சமைத்துக் கொண்டிருந்த போது, அவர் பக்கத்திற்கு சென்ற ராபர்ட் மாஸ்டர் நான் இரண்டு வாரமாக போன் நம்பர் கேட்கிறேன்.... நியாபகம் இருக்கிறதா? அசல் போன நாளிலிருந்து கேட்டு வருகிறேன் என்று கூறினார்.
இதற்கு ரச்சிதா ‘இது ஒரு விஷயம் என இப்படி கேட்டுட்டு இருக்கீங்களே.. நம்பர் கூறினால் ஞாபகம் இருக்குமா? பேப்பர் பேனா இல்லை என்று தட்டிக் கழித்தார்.
மறுபடியும் விடாத ராபர்ட் மாஸ்டர், “அதற்கான சூழல் வந்தது நீ தான் நம்பர் கொடுக்கவில்லை என்று கூறினார்... உடனே ரச்சிதா மீண்டும் முதல்ல இருந்து ஸ்டார்ட் பண்ணாதீங்க என்று கூறிவிட்டு சமைக்க தொடங்கினார்.
முன்னதாக ‘இதுவரை இல்லாத உணர்விது’ பாடலை ரச்சிதாவை நோக்கி பாடிய ராபர்ட், “பெண்ணை நம்பாதே” என்கிற வரிகளில் முடித்தார்.
அதாவது ரச்சிதா தன்னுடன் மட்டும் நெருக்கமாக பழகவில்லை, ஆனால் அனைவருடனும் நன்றாக பழகுகிறார் என்பதை ராபர்ட் அந்த பாடல் மூலமாக வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.