ரெட் காட்டுடன் வெளியேறி தாறுமாறாக ஆட்டம் போட்ட கம்ருதீன்! படுவைரலாகும் காணொளி
பிக்பாஸ் சீசன் 9 இல் ரெட் காட்டுடன் வெளியேறிய கம்ருதீன் தனது ஊருக்கு சென்று ரசிகர்கள் மத்தியில் தாறுமாறாக ஆட்டம் போட்ட காட்சியடங்கிய காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி படு வைரலாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல தொலைக்காட்டியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்ற பார்வதி, கம்ருதின் இருவருக்கும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். இந்த விடயம் தான் சமீபத்தில் இணையத்தில் காட்டு தீயாய் பரவியது.

டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் சாண்ட்ராவை காரில் இருந்து தள்ளிவிட்டமை மற்றும் கெட்ட வார்த்ததைகள் பேசியமை ஆகிய விடயங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை கிளப்பியிருந்தது.
இதனால் ரசிகர்கள் பார்வதி, கம்ருதினுக்கு ரெட் கொடுக்குமாறு வேண்டுகோள் வைத்திருந்தனர். ரசிகர்கள் எதிர்பார்த்தப்படியே விஜய் சேதுபதி அதிரடியாக கம்ருதீன் மற்றும் பார்வதியை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார்.

ரெட் கார்டு கொடுக்கப்பட்டதால், 90 நாட்கள் உள்ளே இருந்து விளையாடிய இருவருக்கும், நிகழ்ச்சி சார்பில் எந்தவொரு பரிசும், AV காணொளியும், மேடையில் வரவேற்பும் வழங்கப்பட மாட்டாது எனவும் இவர்கள் இருவரும் இத்தனை நாட்கள் விளையாடியதற்கு சம்பளமும் வழங்கப்பட மாட்டாது என்று தகவல்கள் வெளியாகியிருந்தது.

பார்வதி தான் கம்ருதீன் ரெட்காட் வாங்கி வெளியேறுவதற்கு முக்கிய காரணம் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். பார்வதிக்கு இணையத்தில் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், கம்ருதீனுக்கு ரசிகர்கள் பலத்த வரவேற்பு கொடுத்து தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தனது ஊரில் கம்ருதீன் ரசிகர்கள் மத்தியில் தாறுமாறாக ஆட்டம் போட்ட காட்சியடங்கிய காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி படு வைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |