Bigg Boss Ramya: மீண்டும் திருவிழாவில் நடனமாடியது ஏன்? பிக் பாஸ் ரம்யா அளித்த விளக்கம்
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ரம்யா ஜோ மீண்டும் தனது பழைய வாழ்க்கைக்கு திரும்பியுள்ளது பரபரப்பு பேச்சு பொருளாக இருக்கின்றது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 24 போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் தற்போது 11 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர்.
இதில் ஒருவராக கலந்து கொண்டவர் தான் ரம்யா ஜோ. ரம்யா பிக்பாஸ் வீட்டில் பயங்கர கோபமாக இருந்தார். அதிகமாக வார்த்தைகளை விடுவது இவருக்கு கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்தது.

மேலும் இவர் கடந்து வந்த பாதைகள் குறித்து கூறும் போது, தான் திருவிழாவில் நடனமாடும் போது மக்கள் தன்னை எவ்வாறு நடத்துவார்கள் என்பதை கண்ணீருடன் விளக்கினார்.
அதுமட்டுமின்றி இதுமாதிரியான ஆடல்பாடல் நிகழ்ச்சிக்கு இனி செல்ல மாட்டேன் என்றும் பிக்பாஸ் வீட்டில் வைத்து கூறினார்.
பிக்பாஸில் 70 நாட்கள் இருந்த ரம்யா 3.5 லட்சம் சம்பளமாக பெறுவார் என்று கூறப்படுகின்றது. தற்போது எலிமினேட் ஆன பின்பு மீண்டும் நடனமாட சென்றுள்ளார்.
இது வைரலான நிலையில், தான் மீண்டும் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு எதற்காக சென்றேன் என்ற விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.

அதாவது தனக்கு பண தேவை இருப்பதாகவும், 100 ருபாய் யார் கொடுப்பார்கள்.... வாடகை, தவணை, தனது செலவு இவற்றிற்கு பணம் தேவைப்படுகின்றது. இதற்காகவே மீண்டும் நடனமாடுவதற்கு சென்றேன் என்று கூறியுள்ளார்.
மேலும் பிக்பாஸிலிருந்து வர வேண்டிய சம்பளம் இன்னும் கையில் கிடைப்பதற்கு தாமதமாகும் என்பதால் மீண்டும் ஆட சென்றதாக கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |