அம்மாவுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட ரமேஷ்! மன்னிப்பு கேட்ட மனைவி- நெகிழ்ச்சி சம்பவம்
ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளம் இருக்கத்தான் செய்கிறது.
எப்போது அடுத்த சீசன் என எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் ஏராளம், விரைவில் அடுத்த சீசன் தொடங்குவதற்கான வேலைகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களை மையமாக வைத்து நடத்தப்படும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் ஜோடிகள்.

ரம்யா கிருஷ்ணன்- நகுல் நடுவர்களாக அசத்த போட்டியாளர்கள் தங்களது நடன திறனை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் ரமேஷ் தன்னுடைய குடும்பத்தினரை அழைத்து வந்துள்ளார், முதன்முறையாக அவரது அம்மாவை அறிமுகப்படுத்தியுள்ளார்.
அவரது மனைவியோ, பிக்பாஸில் ரமேஷ் கலந்து கொள்வது எனக்கு பிடிக்கவில்லை, இரண்டு நாட்கள் அவருடன் பேசாமல் இருந்தேன், ஆனால் என்னுடைய முடிவு தப்பு என நிரூபித்துவிட்டார் என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
