Bigg Boss: ராணவ்விற்கு மருத்துவர்கள் கூறியது என்ன? கண்ணீர் சிந்தும் போட்டியாளர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் ராணவ்விற்கு அடிபட்ட நிலையில், மருத்துவர்கள் அவரை 3 வாரங்கள் ஓய்வு எடுக்குமாறு கூறியுள்ளனர்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் செல்கின்றது.
இந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் தலைவராக விஷால் இருந்து வருகின்றார். இன்னும் 5 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், போட்டியாளர்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.
தற்போது பிக் பாஸ் கொடுக்கப்பட்ட டாஸ்கின் மூலம் ஜெப்ரி மற்றும் ராணவ் மோதிக்கொண்டதில், ராணவ்வின் இடது கையின் தோள்பட்டையில் பயங்கரமாக அடிபட்டுள்ளது.
மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர் 3 வாரங்கள் கட்டாயமாக ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |