பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களின் கொள்கைகளை புட்டு புட்டு வைத்த குயின்சி! பரபரப்பான நொடிகள்..
பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியான குயின்சி லைவ் வீடியோ ஒன்றை வெளியிட்ட ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பிக் பாஸின் வளர்ச்சி
பிரபல தொலைக்காட்சியில் பல கோடி ரசிகர்களை கொண்டு ஒளிபரப்படும் நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி பார்க்கப்படுகிறது.
இதில் ஆரம்பத்தில் சுமார் 21 பிரபலங்களை போட்டியாளராக இறக்கினார்கள், இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் 100 நாட்கள் இருக்க வேண்டும்.
இதனை தொடர்ந்து போட்டியாளர்களுக்கு அதிகமான டாஸ்க்கள் கொடுக்கப்படும். இதில் தவறு செய்யும் போட்டியாளர்கள் நாமினேஷனுக்கு செல்வார்கள்.
இதன்படி, இந்த நிகழ்ச்சி படிபடியாக வளர்ச்சியடைந்து தற்போது ஆறாவது சீசன் சென்றுக் கொண்டிருக்கிறது.
குயின்சியின் நெகிழ்ச்சி பதிவு
மேலும் இந்நிகழ்ச்சி ஆரம்பித்து 57 நாட்களை கடந்து விட்டது என்றப்படியால் சுமார் 8 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் கடந்த வாரம் வெளியேறிய குயின்சி லைவ் வீடியே ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களுக்கு அந்த வீட்டில் இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பது தெரியும்.
மேலும் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களில் சிவின் அல்லது அசிம் பிக் பாஸின் டைட்டில் வின்னர் ஆகலாம்” எனவும் கணிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து “பிக் பாஸை விட்டு வெளியேறிய பின்னர் மிகவும் மரியாதை கொடுக்கிறார்கள் மற்றும் அன்பாக இருக்கிறார்கள்” எனவும் மிகவும் நெகிழ்ச்சியான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
வைரலாகும் வீடியோக்காட்சி
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பிக் பாஸ் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளாதாக கருத்து பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.