பிக்பாஸ் வீட்டில் குயின்ஸிற்கு என்ன ஆச்சு? பரிதாப நிலையில் அமுதவானன்
பிக்பாஸ் வீட்டில் இன்று எந்தவொரு சண்டையும் இல்லாமல் ஜாலியாக செல்லும் காட்சி வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் கடந்த 9ம் தேதி 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்க பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்து, சாந்தி மற்றும் அசல் என மூன்று பேர் வெளியேறிய நிலையில், தற்போது 18 போட்டியாளர்கள் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
நேற்று கமல்ஹாசன் ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் பயங்கரமாக சாடியதோடு, அசீமை அதிகமாகவே வறுத்தெடுத்தார். இறுதியில் போட்டியாளர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் அசல் வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் இன்று தலைவர் போட்டிக்கு குயின்ஸி, நிவா, மணிகண்டன் கலந்து கொண்டு போட்டி போட்ட நிலையில், இதில் மணிகண்டன் இந்த வாரத்திற்கான தலைவராகியுள்ளார்.
தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சியில் போட்டியாளர்கள் ஒருவரையொருவர் நீச்சல் குளத்தில் தூக்கிப் போடுகின்றனர். இதில் அமுதவானன் மிகவும் பரிதாப நிலைக்கு சென்றுள்ளார்.