பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து காணாமல் போன பிரியங்கா: என்ன நடந்தது? அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியாகிய கடைசி இரண்டு ப்ரொமோ காட்சியில் பிரியங்கா காணப்படாததால் அவருக்கு என்ன நடந்தது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் உள்ளே ஐந்து போட்டியாளர்கள் காணப்படுகின்றனர்.
இதில் அமீர், நிரூப் இருவரும் நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்த நிலையில், பிரியங்கா, பாவனி, ராஜு இவர்கள் மூன்று பேரும் இறுதி போட்டியாளராக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சீரியலான செந்தூரப்பூவே, ஈரமான ரோஜாவே சீரியல் பிரபலங்கள் உள்ளே விருந்தினராக வந்துள்ளனர்.
இன்று இரண்டாவது, மூன்றாவது வெளியான ப்ரொமோவில் பிரியங்காவை காணவில்லை.
எந்தவொரு விருந்தினர் வந்தாலும் முதல் ஆளாக துள்ளிக் குதித்து வரும் நிலையில், இன்று அவரைக் காணாமல் உள்ளதால், அவருக்கு என்ன நடந்தது என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.
இன்னும் சில நாட்களில் பிக் பாஸ் சீசன் 5 முடிவடையவிருக்கும் நிலையில் வெற்றியாளராவார் என கருத்தப்பட்ட பிரியங்கா திடீரென காணாமல் போனது பல யுகங்களுக்கு வழி வகுத்துள்ளது. ஆக மொத்தம் இன்று வெளியாகும் நிகழ்ச்சியில் தான் உண்மை என்ன என்பது தெரியவரும்.
பிரியங்கா உடல்நிலை கோளாறு காரணமாக குறித்த பிக்பாஸ் நிகழ்ச்சியைவிட்டு வெளியேறிவிட்டதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றது.