பிக்பாஸில் அரங்கேறிய அதிர்ச்சி: நடிகை குளித்தபோது பாத்ரூம் தாழ்ப்பாளை உடைத்த நடிகர்! கோபத்தில் சல்மான் கான்
சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து சர்ச்சையான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது.
கடந்த வாரம் போட்டியாளர்களிடையே ஏற்பட்ட சண்டையில் பொருட்களை நாசம் செய்தது பயங்கர அதிர்ச்சியினை ஏற்படுத்திய நிலையில், தற்போது பெண் போட்டியாளர் குளித்துக் கொண்டிருக்கையில் ஆண் போட்டியாளர் தாழ்பாளை உடைத்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மோசமான காரியத்தினை செய்தது நடிகர் ப்ரதிக் செஹஜ்பல். இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் டிவி நடிகையான விதி பாண்டியா குளித்து கொண்டிருக்கையில், பாத்ரூம் கதவின் தாழ்ப்பாளை உடைத்துள்ளார்.
இதற்கு பிரபல நடிகை விதி பாண்டியா ஏன் என்று கேள்வி கேட்கையில், சிறிதும் வெட்கப்படாமல், விளையாட்டாக செய்ததாக கூறியதைக் கேட்ட, சக போட்டியாளர்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த சல்மான் ப்ரதிக்கை அவர் செய்த காரியத்திற்காக விளாசியதோடு, உங்களின் அம்மா அல்லது சகோதரியாக இருந்தாலும் இப்படித் தான் செய்வீர்களா என்று பயங்கரமாக கேள்வி எழுப்பியுள்ளார்.