ஓவியாவின் திருமணம் எப்போது? அவரே அளித்த பதில் இதோ
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நடிகை ஓவியா திருமணம் பற்றி ஓர் நேர்காணலில் கூறியுள்ளார்.
நடிகை ஓவியா
களவாணி, கலகலப்பு, மத யானை கூட்டம், மெரினா, முனி போன்ற படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்துக்கொண்டிருந்தவர் தான் நடிகை ஓவியா.
திரைப்படத்தின் மூலம் பிரபலமானதை விட பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார் என்றே கூறலாம். இந்நிழ்ச்சிக்கு பின்னர் ஓவியாவுக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே காணப்படுகிறது.
ஓவியாவுக்குதான் முதன் முதலில் ரசிகர்கள் ஆர்மி என்று ஆரம்பிக்கப்பட்டது. இதில் ஓவியா ஆர்மி லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றது.
அந்நிகழ்ச்சியின் போட்டியாளரான ஆரவ் மற்றும் ஓவியா நல்ல நண்பர்களாக இருந்தார்கள். ஆனால் ஒவியாக்கு அது காதலாக மாறியது எனலாம்.
பல முறை தன் காதலை ஆரவிடம் வெளிப்படுத்தினாலும் அவர் நிராகரித்துக் கொண்டே இருந்தார். இதனால் மனமுடைந்த நடிகை ஓவியா பல முறை தற்கொலை முயற்சியும் முன்னெடுத்தார்.
ஆனாலும், அது சரியானது இல்லை என கூறி நிகழ்ச்சியில் இருந்து தானே விலகுவதாக முடிவு செய்து ஓவியா போட்டியில் இருந்து விலகினார்.
பிக் பாஸ் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற ஓவியாவுக்கு பல பட வாய்ப்புகள் வந்துக்கொண்டே இருந்தது. 90 எம்எல் என்ற படம் இறுதியாக நடித்திருந்தார். ஆனால் அது பெரிதாக வெற்றிபெறவில்லை. அதை தொடர்ந்து தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது திருமணம் குறித்து ஓர் நேர்காணலில் வெளிப்படையாக பேசியுள்ளார்.
திருமணம் குறித்து பேசிய ஓவியா
"நான் இன்னும் தனிமையில் இருக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்க எனக்கு வேறு யாரும் தேவையில்லை என்று நினைக்கிறேன். நடக்க வேண்டிய நேரத்தில் திருமணம் நடக்கும். என் வாழ்வில் திருமணம் நிகழாவிட்டாலும் நான் சந்தோஷமாக இருப்பேன். யாரிடமும் எதையும் எதிர்பார்ப்பதில்லை. நான் தனிமையில் இருப்பதையே அதிகமாக விரும்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.