Bigg Boss: பிக் பாஸில் வெளியேறும் 2 போட்டியாளர்.... பதிலாக உள்ளே வரும் பழைய போட்டியாளர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் சில தினங்களில் முடிய உள்ள நிலையில், தற்போது போட்டியாளர்களுக்கு பயங்கர அதிர்ச்சியை பிக் பாஸ் கொடுத்துள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் செல்கின்றது.
நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், யார் டைட்டில் வின்னர் என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது.
24 போட்டியாளர்கள் உள்ளே வந்து விளையாடிய நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளே இருக்கின்றனர். கடைசியாக கடந்த வாரம் ராணவ் மற்றும் மஞ்சரி இருவர் வெளியேறியுள்ளனர்.
இன்று வெளியான முதல் ப்ரொமோ காட்சியில், சௌந்தர்யா சக போட்டியாளர்களால் மனம் கஷ்டப்பட்டு கதறி அழுதுள்ளார்.
தற்போது இரண்டாவது ப்ரொமோ காட்சி வெளியாகி போட்டியாளர்களையும், பார்வையாளர்களையும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
ஆம் வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் உள்ளே வந்து விளையாடப்போவதாகவும், அவர்களுக்குப் பதிலாக தற்போது இருக்கும் போட்டியாளர்களில் இரண்டு பேர் வெளியேறுவார்கள் என்று பிக் பாஸ் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |