இந்த வார நாமினேஷனில் அனைவரையும் நாமினேட் செய்த பிக்பாஸ் - கதிகலங்கிய போட்டியாளர்கள்;
தமிழ் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. 18 போட்டியாளர்களுடன் அக்டோபர் 3 ம் தேதி துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, தற்போது 85 நாட்களை கடந்துள்ளது. இரண்டு வைல்ட் கார்டு என்ட்ரியுடன் சேர்த்து தற்போது 8 போட்டியாளர்கள் வீட்டிற்குள் உள்ளனர்.
முதல் முறையாக டபுள் எவிக்ஷன் நடத்தப்பட்டு அக்ஷரா மற்றும் வருண் நேற்று வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
இதனிடையே, நிகழ்ச்சியின் 85 வது நாளான இன்று போட்டியாளர்கள் அனைவரும் கார்டன் ஏரியாவில் நிற்க வைக்கப்பட்டு, ஓப்பன் நாமினேஷன் நடத்தப்பட்டது.
இதில் ஒவ்வொரு போட்டியாளரும் இரண்டு பேரை நாமினேட் செய்ய வேண்டும் என கூறப்பட்டது. பெடஸ்டலில் திறக்க கூடாது என சொல்லி கார்டு ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது.
இதில் ஒவ்வொருவரும் மாற்றி மாற்றி நாமினேட் செய்ய, ஓப்பன் நாமினேஷன் முடிந்ததும் பேசிய பிக்பாஸ், இன்னும் மூன்று வாரங்களே உள்ளது. ஃபினாலே ரேசிற்கான முக்கியமான வாரம் இது.
இன்னும் 21 நாட்களே உள்ளது. அதனால் இனி வரும் டாஸ்க்குகள், அதில் உங்களுக்காக விளையாடி உங்கள் வெற்றியை உறுதி செய்து கொள்வது முக்கியம் என சொல்லி, ராஜுவிடம் அந்த கார்டை படிக்க சொல்கிறார்.
அதில் அனைவரும் எவிக்ஷனுக்காக நாமினேட் செய்யப்படுகிறீர்கள் என எழுதப்பட்டுள்ளது. இதனால் போட்டியாளர்கள் அதிர்ச்சியடைகின்றனர்.