Bigg Boss Kondattam: அரங்கத்தில் அர்ச்சனாவை கண்கலங்க வைத்த ரசிகை! வெளியான ப்ரொமோ காட்சி
பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், பிக் பாஸ் கொண்டாட்டத்திற்கான ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிரப்பான பிக் பாஸ் நிழக்ச்சி கடந்த வருடம் ஏழாவது சீசன் நடந்து முடிந்தது. இந்த சீசனில் அர்ச்சனா டைட்டில் வின்னராகினார்.
இந்த சீசனில் மிகவும் சர்ச்சையான போட்டியாளர்கள் என்றால் அது மாயா, பூர்ணிமா தான். வார நாட்கள் அனைத்தும் சண்டையில் ஆரம்பிக்கும் இவர் சரியாக சனிக்கிழமை அனைவரிடமும் சமாதானம் ஆகிவிடுவார்கள்.
ஆனால் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே சென்ற அர்ச்சனா மக்களின் மனதை வென்று பிக் பாஸ் பட்டத்தினை தட்டித் தூக்கினார்.
வைல்டு கார்டு போட்டியாளர் பிக் பாஸ் டைட்டிலை வென்றது இதுவே முதன்முறையாகும். இந்நிலையில் பிக் பாஸ் கொண்டாட்டம் பிரபல ரிவியில் நடைபெற இருக்கின்றது.
இதில் பிக் பாஸ் 7ல் கலந்து கொண்ட அனைத்து பிரபலங்களும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.