மருத்துமனையிலிருந்து வீடு திரும்பிய கமல்! நாளை பிக்பாஸில் கலந்து கொள்வாரா?
நடிகர் கமல்ஹாசன் உடல் நலக் குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன்
தமிழ் சினிமாவில் உலகநாயகனாக வலம்வரும் நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் தீவிரமாக நடித்து வருகின்றனர். இதுமட்டுமின்றி தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சினையும் தொகுத்து வழங்கி வருகின்றார்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஐதராபாத் சென்ற நடிகர் கமல்ஹாசன், அங்கு இயக்குனர் விஸ்வநாத்தைச் சந்தித்ததுடன், சில நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு நேற்று சென்றை திரும்பினார்.
இந்நிலையல் திடீரென காய்ச்சல் ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இன்று வீடு திரும்பிய கமல்ஹாசன்
இந்நிலையில் தற்போது சிகிச்சை முடிந்து சுகம் பெற்ற கமல்ஹாசன் இன்று வீடு திரும்பியுள்ளார். மருத்துவர்கள் அவரை ஓய்வு எடுப்பதற்கு பரிந்துரை செய்துள்ளனர்.
இதனால் நாளை பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், நாளைய புதி தொகுப்பாளராக வருபவர் யார் என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்.