பிக்பாஸிலிருந்து வெளியேறிய போட்டியாளர் இவர்தானாம்! லீக்காகிய தகவல்
பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற உள்ள முதல் போட்டியாளர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக சண்டை - சச்சரவுகளுடன் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது.
முதல் வாரத்திலேயே சில பிரச்சனைகள் தலை தூக்கினாலும், இரண்டாவது வாரத்தில் செருப்பை கழட்டி அடிக்க செல்லும் அளவிற்கு பிரச்சனைகள் பெரிதாகியுள்ளது.
தற்போது இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் விளையாடி வரும் நிலையில், முதல் வாரத்தில் மட்டும் சுமார் 15 போட்டியாளர்களுக்கு மேல் நாமினேஷன் லிஸ்டில் இடம்பிடித்துள்ளனர்.
வெளியேறுபவர் யார்?
எனவே, இந்த வாரம்... பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற உள்ள அந்த முதல் போட்டியாளர் யாராக இருப்பர் என்பதை அறிந்து கொள்வதில், அனைவருக்கும் ஆர்வம் உள்ளது.
இந்த வாரம் தனலட்சுமி எந்தவொரு சர்ச்சையிலும் சிக்காததால் அவர் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்பு குறைவு ன்று கூறப்படுகின்றது. மேலும், நிறைய போட்டியாளர்கள் உள்ளதால்... யார் வெளியே செல்வர் என்று யூகிக்க முடியாத நிலையும் உள்ளது.
எனினும் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, பத்திரிகையாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த அரசியல்வாதி, விக்ரமன் வெளியேற வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் இதில் ஏதேனும் மாற்றம் இருக்குமா? நெட்டிசன்களின் கணிப்பு படி இவர் தான் வெளியேறுவாரா என்பது நாளைய தினமே தெரிய வரும்.